Friday, 29 November 2013

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்,


பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன. உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது.

பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம். சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், பருக்கள் வரும். பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரலாம்.

தடுக்க சில வழிமுறைகள்…….

நம் பாரம்பரிய வழக்கப்படி, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் இதற்கு சிறப்பான தீர்வு. நல்லெண்ணெயை உச்சந் தலை, தொப்புள் மற்றும் கால் பெருவிரல் இரண்டிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்கவேண்டும். அதிக சூடு உள்ளவர்கள் வில்வப்பழத் தைல எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கலாம்.

நீராகாரம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். எலுமிச்சை, இஞ்சி, தேன் சேர்த்த சாறுடன் பருக வேண்டும். சின்ன வெங்காயத்தை மோருடன் கலந்து தினமும் மதியம் பருகலாம். நிறையப் பிஞ்சு வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுங்கள். நுங்கு நீரை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிவர வேண்டும்.

சங்கை எலுமிச்சைச் சாறில் இழைத்து பரு உள்ள இடங்களில் பூச வேண்டும். சங்கு கிடைக்காவிட்டால் சங்குபஸ்பம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதையும் பயன்படுத்தலாம். சந்தனத்தை நன்றாக இழைத்துப் பூசிவர, பரு காய்ந்துபோகும்.

குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும். சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மாவால் முகம் கழுவினால், பருவின் வீரியம் கட்டுப்படும்.  முகப்பரு உள்ளவர்கள் புளிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவேண்டும். காரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படிச் செய்தால், பருக்கள் இன்னும் அதிகமாகப் பரவிவிடும். தலையில் பொடுகு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அசைவு உணவுகளை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்க்க வேண்டும்.

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்,


மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும்.

சிலருக்கு சளி பிடிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் ம‌ருதாணி இடும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.

இப்ப‌டி செய்வதால் ஜ‌ல‌தோஷ‌ம் பிடிப்ப‌து குறையும். மருதாணியை போட்டு ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.

கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்கு சிவப்பாக பிடிக்கும்.
மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும்.

சிலருக்கு சளி பிடிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் ம‌ருதாணி இடும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.

இப்ப‌டி செய்வதால் ஜ‌ல‌தோஷ‌ம் பிடிப்ப‌து குறையும். மருதாணியை போட்டு ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.

கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்கு சிவப்பாக பிடிக்கும்.

சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்,


அழகு நிலையத்துக்கு போய் ஒப்பனை செய்ய அதிக செவாகும். அவ்வளவு பணம் இல்லையே என வருத்தப்படுபவர்களில் எத்தனை பேருக்கு வீட்டு அடுப்படியில் அழகுக்கான அத்தனை பொருட்களும் குவிந்து கிடக்கும் ரகசியம் தெரியுமா?. அவை என்னவென்று பார்க்கலாம்.

• வெள்ளரிச்சாறு- பன்னீர் சமஅளவு எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வாருங்கள். முகம் ஜொலிக்கும். தேன்- எலுமிச்சைச் சாறு கலவையையும் முகத்தில் தேய்த்து வரலாம்.

• மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, காய்க்காத பால் கலவையை நன்றாக கலந்து அதை முகத்தில் அழுந்த தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் முகம் பிரகாசிக்கும். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வரலாம்.

• மோரில், சிறிது ஓட்ஸ் கலந்து முகத்தில் கெட்டியாக தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால்.. அழுக்குகள் நீங்கி பளிச்சென்று தோன்றும்.

• தேங்காய்த் தண்ணீரில் முகம் கழுவுங்கள். முகம் மென்மையாகும்.

• அதிக வெயிலால் முகம் கறுத்துவிட்டதா? பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், தேன் கலவையைப் பூசி 15 நிமிடம் ஊற வைத்த பின்னர் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை படிப்படியாக நீங்கும்.

• எலுமிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி குளித்து வந்தால் பளபளப்பு கிடைக்கும்.

• முழங்கை- கால் மூட்டுகளில் கருமை தென்படுகிறதா? எலுமிச்சை சாறு- கடலை மாவு கலவையைப் பூசி கழுவி வாருங்கள், கண்கூடாக பலன்கள் தெரியும்

சருமத்தை பாதுகாக்கும் அழகு குறிப்புகள்

 அனைவருக்குமே எப்போதும் அழகாக ஜொலிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் அந்த அழகுப் பொருட்களில் உள்ள கெமிக்கலால் அழகே பாழாகிவிடும்.

என்ன தான், இயற்கை முறைகளை பின்பற்றினாலும், ஒருசில பழக்கவழக்கங்கள் மூலமும் அழகானது பாழாகும். எனவே இயற்கையாகவே அழகாக திகழ வேண்டுமெனில், ஒரு சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற்று அழகாகலாம். அவை என்னவென்று பார்க்கலாம்…

• தினமும் இரவில் தூங்கும் முன், முகத்தில் இருக்கும் மேக்-கப்பை நீக்கிவிட்டு தூங்க வேண்டும். இதனால், பருக்கள் மற்றும் பிம்பிள் வருவதை தவிர்க்க முடியும். மேலும் வெளியே வெயிலில் செல்லும் முன், சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

• வாரந்தோறும் முடிக்கு, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் மாஸ்க் போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி ஆரோக்கியமாக உதிராமல், நல்ல வளர ஆரம்பிக்கும். என்ன தான் சருமம் மற்றும் முடியை வெளிப்புறத்தில் பராமரித்தாலும், உடலில் சத்துக்கள் இருந்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.

எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்துடன், சருமமும் பளிச்சென்று மின்ன ஆரம்பிக்கும்.

• தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவுடன் திகழு

முக அழகிற்கு எளிய குறிப்புகள்,

சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள்  ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து 1 ஸபூன் தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முக சருமம்  பாதுகாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், மற்றொன்று எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

முட்டைகோஸ் பேஷியல்,


முகத்தின் அழகை பராமரிக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம். முட்டை கோசில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைகோஸை வைத்து முகத்தை அழகை ஜொலிக்க வைக்கலாம்.

காய்கறியை கொண்டு பேஷியல் செய்வதற்கு முன்பாக சருமத்தை நன்றாக தூய்மை படுத்த வேண்டும். காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் நன்றாக அழுத்தி துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைக்கவும்.

பின்னர் அரைத்த விழுதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்து வடிகட்டி சாறு எடுத்து தனியா வைக்கவும்.. முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும்.

இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் ஜொலிக்கும். இந்த பேஷியலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

கோடை கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்,

* எண்ணெய், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது.

* ஹேர் கலரிங், கெமிக்கல் ட்ரீட்மென்ட்டை அடிக்கடி எடுக்க வேண்டாம்.

* நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிடவும். தண்ணீர் நிறைய பருகவும். புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

* தேங்காய் எண்ணெய் அரை லிட்டர், நல்லெண்ணை அரை லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு கால் லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சவும். அதன் பின் இதை வடிகட்டி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த எண்ணெயைத் தேய்த்து வர, இளநரை வருவதை தவிர்க்கலாம்.

* சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.