Thursday, 28 November 2013

கூந்தல் வறட்சியை தடுக்க வழிகள்,

பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி. ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது என்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்…

• கூந்தலை வறட்சியின்றி பட்டுப்போன்று வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் போட்டு குளிர்க்க வேண்டும். இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

• மயோனைஸ் ஒரு கண்டிஷனர் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மயோனைஸ் கொண்டு கூந்தலை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.

• நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும்.

• வறட்சியாக காணப்படும் கூந்தலை, மென்மையாக மாற்றுவதற்கு தக்காளி சாற்றினைக் கொண்டு தலையை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

• பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment