Friday, 29 November 2013

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்,


பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன. உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது.

பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம். சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், பருக்கள் வரும். பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரலாம்.

தடுக்க சில வழிமுறைகள்…….

நம் பாரம்பரிய வழக்கப்படி, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் இதற்கு சிறப்பான தீர்வு. நல்லெண்ணெயை உச்சந் தலை, தொப்புள் மற்றும் கால் பெருவிரல் இரண்டிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்கவேண்டும். அதிக சூடு உள்ளவர்கள் வில்வப்பழத் தைல எண்ணெய் பயன்படுத்திக் குளிக்கலாம்.

நீராகாரம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். எலுமிச்சை, இஞ்சி, தேன் சேர்த்த சாறுடன் பருக வேண்டும். சின்ன வெங்காயத்தை மோருடன் கலந்து தினமும் மதியம் பருகலாம். நிறையப் பிஞ்சு வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுங்கள். நுங்கு நீரை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிவர வேண்டும்.

சங்கை எலுமிச்சைச் சாறில் இழைத்து பரு உள்ள இடங்களில் பூச வேண்டும். சங்கு கிடைக்காவிட்டால் சங்குபஸ்பம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதையும் பயன்படுத்தலாம். சந்தனத்தை நன்றாக இழைத்துப் பூசிவர, பரு காய்ந்துபோகும்.

குப்பைமேனிக் கீரையுடன் பூசுமஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும். சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மாவால் முகம் கழுவினால், பருவின் வீரியம் கட்டுப்படும்.  முகப்பரு உள்ளவர்கள் புளிப்பு, கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவேண்டும். காரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படிச் செய்தால், பருக்கள் இன்னும் அதிகமாகப் பரவிவிடும். தலையில் பொடுகு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதாக ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அசைவு உணவுகளை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்க்க வேண்டும்.

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்,


மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும்.

சிலருக்கு சளி பிடிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் ம‌ருதாணி இடும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.

இப்ப‌டி செய்வதால் ஜ‌ல‌தோஷ‌ம் பிடிப்ப‌து குறையும். மருதாணியை போட்டு ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.

கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்கு சிவப்பாக பிடிக்கும்.
மருதணியை விரும்பாத பெண்களே கிடையாது. சில பெண்களுக்கு மருதாணி ஒத்து கொள்வதில்லை. அதனால் சிலர் அதை விரும்புவதில்லை. சில பேருக்கு மருதாணி வைத்தால் கை கால் இழுக்கிற மாதிரி இருக்கும்.

சிலருக்கு சளி பிடிக்கும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் ம‌ருதாணி இடும் போது மருதாணி ரெடி மேட் கோன் என்றால் கையில் கடுகு எண்ணையை தேய்த்து விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தைலம், கழுத்து நரம்பு கிட்ட கொஞ்சம் தைலம், இப்படி ஒவ்வொரு ஜாயிண்ட், கை மணீ கட்டு, முழஙகை ஜாயிண்ட்டில் எல்லாம் தடவி கொண்டு வையுங்கள்.

இப்ப‌டி செய்வதால் ஜ‌ல‌தோஷ‌ம் பிடிப்ப‌து குறையும். மருதாணியை போட்டு ஒரு மணி நேரம் மட்டும் வைத்திருந்தால் போதும். மருதாணி காய்ந்ததும் அதை எடுக்கும் போது உடனே தண்ணீர் போட்டு கழுவ கூடாது. ஒரு பட்டர் நைஃபால் அப்படியே வழித்தெடுக்க வேண்டும்.

கையை கழுவ கூடாது. அப்படியே கேஸ் அடுப்பை பற்ற வைத்து குளிர் காய்வது போல் கையை காட்டவும். இப்போது மறுபடியும் கொஞ்சம் தைலம் + தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். 3 மணி நேரத்திற்கு கையை கழுவ கூடாது. இவ்வாறு செய்தால் மருதாணி நன்கு சிவப்பாக பிடிக்கும்.

சமையலறையில் இருக்கு பொலிவுக்கான சூட்சமம்,


அழகு நிலையத்துக்கு போய் ஒப்பனை செய்ய அதிக செவாகும். அவ்வளவு பணம் இல்லையே என வருத்தப்படுபவர்களில் எத்தனை பேருக்கு வீட்டு அடுப்படியில் அழகுக்கான அத்தனை பொருட்களும் குவிந்து கிடக்கும் ரகசியம் தெரியுமா?. அவை என்னவென்று பார்க்கலாம்.

• வெள்ளரிச்சாறு- பன்னீர் சமஅளவு எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வாருங்கள். முகம் ஜொலிக்கும். தேன்- எலுமிச்சைச் சாறு கலவையையும் முகத்தில் தேய்த்து வரலாம்.

• மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, காய்க்காத பால் கலவையை நன்றாக கலந்து அதை முகத்தில் அழுந்த தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் முகம் பிரகாசிக்கும். இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வரலாம்.

• மோரில், சிறிது ஓட்ஸ் கலந்து முகத்தில் கெட்டியாக தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால்.. அழுக்குகள் நீங்கி பளிச்சென்று தோன்றும்.

• தேங்காய்த் தண்ணீரில் முகம் கழுவுங்கள். முகம் மென்மையாகும்.

• அதிக வெயிலால் முகம் கறுத்துவிட்டதா? பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், தேன் கலவையைப் பூசி 15 நிமிடம் ஊற வைத்த பின்னர் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை படிப்படியாக நீங்கும்.

• எலுமிச்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி குளித்து வந்தால் பளபளப்பு கிடைக்கும்.

• முழங்கை- கால் மூட்டுகளில் கருமை தென்படுகிறதா? எலுமிச்சை சாறு- கடலை மாவு கலவையைப் பூசி கழுவி வாருங்கள், கண்கூடாக பலன்கள் தெரியும்

சருமத்தை பாதுகாக்கும் அழகு குறிப்புகள்

 அனைவருக்குமே எப்போதும் அழகாக ஜொலிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம். இருப்பினும் அந்த அழகுப் பொருட்களில் உள்ள கெமிக்கலால் அழகே பாழாகிவிடும்.

என்ன தான், இயற்கை முறைகளை பின்பற்றினாலும், ஒருசில பழக்கவழக்கங்கள் மூலமும் அழகானது பாழாகும். எனவே இயற்கையாகவே அழகாக திகழ வேண்டுமெனில், ஒரு சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற்று அழகாகலாம். அவை என்னவென்று பார்க்கலாம்…

• தினமும் இரவில் தூங்கும் முன், முகத்தில் இருக்கும் மேக்-கப்பை நீக்கிவிட்டு தூங்க வேண்டும். இதனால், பருக்கள் மற்றும் பிம்பிள் வருவதை தவிர்க்க முடியும். மேலும் வெளியே வெயிலில் செல்லும் முன், சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

• வாரந்தோறும் முடிக்கு, வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஹேர் மாஸ்க் போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி ஆரோக்கியமாக உதிராமல், நல்ல வளர ஆரம்பிக்கும். என்ன தான் சருமம் மற்றும் முடியை வெளிப்புறத்தில் பராமரித்தாலும், உடலில் சத்துக்கள் இருந்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.

எனவே எண்ணெயில் பொரித்த உணவுகள், ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், பழச்சாறு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்துடன், சருமமும் பளிச்சென்று மின்ன ஆரம்பிக்கும்.

• தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவுடன் திகழு

முக அழகிற்கு எளிய குறிப்புகள்,

சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள்  ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து 1 ஸபூன் தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முக சருமம்  பாதுகாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், மற்றொன்று எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

முட்டைகோஸ் பேஷியல்,


முகத்தின் அழகை பராமரிக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம். முட்டை கோசில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைகோஸை வைத்து முகத்தை அழகை ஜொலிக்க வைக்கலாம்.

காய்கறியை கொண்டு பேஷியல் செய்வதற்கு முன்பாக சருமத்தை நன்றாக தூய்மை படுத்த வேண்டும். காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் நன்றாக அழுத்தி துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைக்கவும்.

பின்னர் அரைத்த விழுதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்து வடிகட்டி சாறு எடுத்து தனியா வைக்கவும்.. முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும்.

இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் ஜொலிக்கும். இந்த பேஷியலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

கோடை கால கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்,

* எண்ணெய், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போன்றவற்றை தினமும் பயன்படுத்தக் கூடாது.

* ஹேர் கலரிங், கெமிக்கல் ட்ரீட்மென்ட்டை அடிக்கடி எடுக்க வேண்டாம்.

* நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிடவும். தண்ணீர் நிறைய பருகவும். புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

* தேங்காய் எண்ணெய் அரை லிட்டர், நல்லெண்ணை அரை லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு கால் லிட்டர் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சவும். அதன் பின் இதை வடிகட்டி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த எண்ணெயைத் தேய்த்து வர, இளநரை வருவதை தவிர்க்கலாம்.

* சோற்றுக் கற்றாழையை கீறி அதன் நடுவில் வெந்தயம் வைத்து இரண்டு பக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும். கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து, முளை கட்டிய வெந்தயம், சோற்றுக் கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து அதனுடன் செம்பருத்தி இலையையும் சேர்த்து பேக் போல தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளித்தால் வெயிலின் கடுமையால் வரும் நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.

கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்,

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.
குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

• கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

• பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, இந்த முறை சரியாக இருக்கும். அதற்கு கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

• கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை,


ஹேர் டையை முதன்முதலில் அழகு நிலையங்களில் போடுவது நல்லது.  டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். பிரஷ் உபயோகித்து டையை போட கூடாது. அப்படி போடும் போது டையை எடுத்து தட்டையாக போட கூடாது. பிரஷ் உபயோகப்படுத்துவதால் காற்று உள்ளே போகாது.

எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும். சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள்.

சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும்.

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன், கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள்.

எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும். எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளி போடுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவு நல்லது.

ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம். கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும்.

முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான முறையில் ஹென்னாவை எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா – 250 கிராம்
ஒரு முட்டை – வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் – 2  ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் – 2 ஸ்பூன்
(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)
நெல்லிக்காய் பவுடர் – 50 கிராம்
தயிர் – 2  ஸ்பூன்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.

அழகைத் தக்க வைக்க டிப்ஸ்,

இன்றைய பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று கண்டதையும் முகத்தில் போட்டு கொள்கிறார்கள். ஆனால் என்னதான் முகத்தில் மேக்கப் போட்டு கொண்டாலும் நான் தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவிட்டால் உண்மையான அழகு தெரியாது.

எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் அழகாகலாம் என்பதை பார்க்கலாம். எந்த விதமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகை பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸ்ஸூம் அதிகரிக்கும்

பெர்ஃப்யூம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை


ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும்.
எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும். பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ஃபியூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.

பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும்.

அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான். பட்டு புடவையில் உள்ள சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.

கரும்புள்ளிகளை போக்கும் காய்கறி ஃபேஸ் மாஸ்க்குகள்,

முள்ளங்கி :

முள்ளங்கியை சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, உலர வைத்து கழுவினாலும், கரும்புள்ளிகள் மறையும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது நூறு சதவீத உண்மை. அந்த அகத்தை மாசற்ற வகையில் பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது.

அழுக்கு படிந்த முகத்தை நாம் கண்ணாடியில் பார்க்கும்போதே தன்னம்பிக்கை என்பது பறிபோய்விடும். அதனை நம்பிக்கையாக மாற்ற மேற் கூறிய மாஸ்க் வகைகளை (குறைந்த செலவு மட்டுமே) பயன்படுத்தி அகத்தை மேலும் அழகுற செய்வோம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போல் அரைத்து, 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கொத்தமல்லி :

கொத்தமல்லியை அரைத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் லேசாக மசாஜ் செய்து, வெது வெதுப்பாக இருக்கும் நீரில் அலச வேண்டும்.

வெள்ளரிக்காய் :

முகத்திற்கு ஆவிப்பிடித்து 10 நிமிடம் கழித்து, வெள்ள ரிக்காயை அரைத்து முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும்.

இஞ்சி :

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 23 முறை செய்து வந்தால், கரும்புள்ளி போவது உறுதி.

முகத்தில் கரும்புள்ளிகளை போக்கும் மாஸ்க் மருத்துவம்


மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்து விட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா? சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப் போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்களில் அதிகம் காணப்படும்.

ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும் புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கி விடும்.

கூந்தல் வளர்ச்சிக்கான குறிப்புகள்,

ஹேர் ஸ்கிரைப்பர் : முடியில் ஷாம்பு போடும் போது விரலால் மண்டையோட்டு பகுதியில் மசாஜ் செய்வதை மேலும் சிறப்பாக செய்ய ஹேர் ஸ்கிரைப்பர் உதவும். ரப்பரால் உருவாக்கப்பட்ட இதன் பற்கள், மண்டையோட்டுப் பகுதி சருமத்தில் பட்டு ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும்.

ஹேர் மூஸ் : ஷேவிங் நுரை வடிவத்தில் காணப்படும். இதை பயன்படுத்தினால் கூந்தலின் உள்பகுதி அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.

ஹேர் சிரம் :  கூந்தலுக்கு பாலிஷிங் எபக்ட் கிடைப்பதற்கு உதவும். ஜொலிப்பு அதிகரிக்கும். முடி, ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் பிரிந்து அழகாக காணப்படும்.

ஹேர் மாஸ்க் : முடியை மென்மையாக்கும். இந்த மென்மைக்காகதான் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தி வருகிறோம். ஹேர் மாஸ்க் அதன் நவீனமாகும். மொராக்கோ ஆயில்…… முடிக்கு பலத்தை தருவது சுரோட்டினாகும். அதன் இழப்பை ஈடுகட்டுவதால், முடி பலம் பெறும்.



பள பள அழகு தரும் பப்பாளி,

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.
வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.
*
முகம் பளபளப்பாக மாறணுமா?
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
1. பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

2. இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.

3. சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும்.

4. இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.
*
எப்படி என்கிறீர்களா?
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு சீக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும.
***
கருவளையமா?
ஒரு சில பெண்களின் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை மாற்றி இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது.
***
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
சோற்றுக்கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ்- ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, இது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படி செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதை காண்பீர்கள்.
***
சிவப்பழகு வேண்டுமா?
பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்…

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!
இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.
***
வெண்பிஞ்சு பாதங்கள்!

பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.
*
டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.
*
இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.
*
அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்:

தேங்காய்க் கீற்று – 2
வெள்ளைமிளகு – 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

கூந்தல் பராமரிப்பு – தெரிந்து கொள்ள வேண்டியவை,

தற்காலத்தில் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்திருக்கும் சூழலில் நம் கூந்தலை சிறப்பாகப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது. வாரம் ஒரு முறையாவது கூந்தலுக்கு ஆயில் மசாஜ் எடுத்துக்கொண்டால் கூந்தல் பராமரிப்பு எளிதாக இருக்கும்.

நம் தலையின் வெளிப்பகுதியில் நம் பார்வையில் படுகிற முடிகளுக்கு உயிர் கிடையாது. அங்கு இரத்தமோ, நரம்புகளோ கிடையாது. ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும்.

கூந்தலின் செழுமை உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருந்தால் கூந்தலும் அடர்த்தியாக, அழகாக இருக்கும். சரியான தூக்கமின்மையும் கூந்தலின் அழகு கெடக் காரணமாக அமைகிறது.

நம் கூந்தல் ‘கெராட்டின்’ என்கிற புரதத்தால் ஆனது. அழகான கூந்தல் வேண்டுவோர்,முதலில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும். நல்ல சாப்பாடு, ஆரோக்கியமான காற்று, போதுமான உறக்கம் இவையெல்லாம் ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமானது.

1.ஆரோக்கியத்தைத் தரும் உணவு உண்ணாமல், வெறுமனே விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் எண்ணைகளால் கூந்தலின் வளர்ச்சியையும், அழகினையும் அதிகரிக்க முடியாது.

2.வைட்டமின் B & C, மீன் எண்ணை, பீட்டர் கெரட்டின், செலோனியம் மற்றும் தாதுப் பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3.அளவுக்கு அதிகமான வெயில், உப்புக்காற்று, குளோரின் கலந்த தண்ணீர் இவை கூந்தல் ஆரோக்கியத்தினைப் பாதிக்கக்கூடியன.

சுருட்டை முடியை பராமரிக்க வழிகள்,

சுருட்டை முடி இருப்பவர்கள் அதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. சுருட்டை முடியை எளிதில் பராமரிப்பதற்கு ஒரு சில வழிகள் உள்ளன. அத்தகயை வழிகளை மனதில் கொண்டு தினமும் முடியைப் பராமரித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகான தோற்றத்தையும் தரும்.

- சுருட்டை முடி உள்ளவர்களது முடி விரைவில் வறட்சியடையும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகப்படியான எண்ணெய் தேய்க்காமல், லேசாக எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கெமிக்கல் அதிகம் இல்லாத அல்லது இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தினால், முடி நன்கு மென்மையுடன், பொலிவோடு இருக்கும்.

- தலைக்கு குளித்தப் பின்னர், முடி ஓரளவு ஈரத்துன் இருக்கும் போதே, வேண்டிய ஸ்டைலில் முடியை சீவினால், முடியானது அடங்கியிருப்பதோடு, வறட்சியின்றி முடியும் மென்மையாக இருக்கும்.

- விலை குறைவாக உள்ளது என்று முடிக்கு கண்ட கண்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அதிகளவு கெமிக்கல்கள் முடிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே முடியின் மென்மை மற்றும் பொலிவை இழக்காமல் இருப்பதற்கு, நல்ல தரமான பொருட்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

-  முடியின் மென்மைத்தன்மையை அதிகரிப்பதற்கு, தலைக்கு குளித்து முடித்து இறுதியில் 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, தலைக்கு ஊற்றினால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருக்கும்.

- தலைக்கு குளித்தால், முடியை உலர வைப்பதற்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தக்கூடாது. இதனால் முடி உதிர்தல் தான் ஏற்படும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையாக உலர வைத்தால், முடியில் உள்ள இயற்கையான ஈரப்பசையானது முடியை வறட்சியடையச் செய்யாமல் பாதுகாக்கும்

பளபள உதடுகள் பெற.,


மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல்லை. உதடுகளுக்குப் போதிய பராமரிப்பு இல்லாதபோது அவை உலர்ந்து, கருத்து, பிளவுபட்டு அழகு குறைவதோடு மட்டுமில்லாமல் உடல்நிலையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது! இவ்வாறு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாமே!

உதடுகள் உலர்வதற்கான காரணங்கள்

* உடலில் தண்ணீர் அளவு குறைந்திடும்போது.
* வைட்டமின் ஏ, பி, சி குறைபாடு இருந்தால்.
* அதிக அளவில் காபி அருந்துவதால்.
* அதிக அளவில் சூரிய வெப்பம், தூசு மற்றும் மாசுப் பொருட்களினால் பாதிப்படையும்போது.
* அடிக்கடி உதடுகளை ஈரமாக்குவதால்.

உதடுகள் கருப்பதற்கான காரணங்கள்

* அதிக அளவில் காபி அருந்துவதால்.
* மலிவு விலை உதட்டுப் பூச்சுக்களைப் பயன்படுத்துவதால்.
* உதட்டுப் பூச்சு மற்றும் உதட்டுப் பூச்சு லைனர்களை அதிக அளவில் அடிக்கடிப் பயன்படுத்துவதால்.
* அடிக்கடி உதடுகள் காய்ந்துபோவதால்.
* புகைப்பிடிப்பதால்.

இதழ்களின் கருமையை நீக்கும் வழிகள்

* தினமும் சிறிதளவு நெய்யினால் மெதுவாக மசாஜ் செய்திடுங்கள்.
* ஒரு நாளில் 8 டம்ளர் நீர் அருந்திடுங்கள்.
* சத்தான உணவினை உட்கொள்ளுங்கள்.
* தரமான உதட்டுப்பூச்சைப் பயன்படுத்துங்கள்.
* அதிக அளவில் காபி அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.
* எலுமிச்சைச் சாற்றை அடிக்கடி உதடுகளில் தடவுங்கள்.

பளபள உதடுகளுக்கான சில எளிய குறிப்புக்கள்

* ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீர் குடித்திடுங்கள்.
* காலை மற்றும் இரவு பல் தேய்த்த பிறகு, பிரஷ்ஷின் பின்புறத்தினால் உதடுகளை மெதுவாக மசாஜ் செய்திடுங்கள்.
* ஏ, பி, சி வைட்டமின்கள் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சருமத்திற்கு ஒவ்வாத அழகுப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
* வெளியே செல்லும்போதும், இரவு படுப்பதற்கு முன்பும் உதடுகளில் தரமான உதட்டுக் களிம்புகளைத் (Lip balm) தடவிடுங்கள்.

பளபள உதடுகள் பெற.,


மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல்லை. உதடுகளுக்குப் போதிய பராமரிப்பு இல்லாதபோது அவை உலர்ந்து, கருத்து, பிளவுபட்டு அழகு குறைவதோடு மட்டுமில்லாமல் உடல்நிலையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது! இவ்வாறு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாமே!

உதடுகள் உலர்வதற்கான காரணங்கள்

* உடலில் தண்ணீர் அளவு குறைந்திடும்போது.
* வைட்டமின் ஏ, பி, சி குறைபாடு இருந்தால்.
* அதிக அளவில் காபி அருந்துவதால்.
* அதிக அளவில் சூரிய வெப்பம், தூசு மற்றும் மாசுப் பொருட்களினால் பாதிப்படையும்போது.
* அடிக்கடி உதடுகளை ஈரமாக்குவதால்.

உதடுகள் கருப்பதற்கான காரணங்கள்

* அதிக அளவில் காபி அருந்துவதால்.
* மலிவு விலை உதட்டுப் பூச்சுக்களைப் பயன்படுத்துவதால்.
* உதட்டுப் பூச்சு மற்றும் உதட்டுப் பூச்சு லைனர்களை அதிக அளவில் அடிக்கடிப் பயன்படுத்துவதால்.
* அடிக்கடி உதடுகள் காய்ந்துபோவதால்.
* புகைப்பிடிப்பதால்.

இதழ்களின் கருமையை நீக்கும் வழிகள்

* தினமும் சிறிதளவு நெய்யினால் மெதுவாக மசாஜ் செய்திடுங்கள்.
* ஒரு நாளில் 8 டம்ளர் நீர் அருந்திடுங்கள்.
* சத்தான உணவினை உட்கொள்ளுங்கள்.
* தரமான உதட்டுப்பூச்சைப் பயன்படுத்துங்கள்.
* அதிக அளவில் காபி அருந்துவதைத் தவிர்த்திடுங்கள்.
* எலுமிச்சைச் சாற்றை அடிக்கடி உதடுகளில் தடவுங்கள்.

பளபள உதடுகளுக்கான சில எளிய குறிப்புக்கள்

* ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீர் குடித்திடுங்கள்.
* காலை மற்றும் இரவு பல் தேய்த்த பிறகு, பிரஷ்ஷின் பின்புறத்தினால் உதடுகளை மெதுவாக மசாஜ் செய்திடுங்கள்.
* ஏ, பி, சி வைட்டமின்கள் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சருமத்திற்கு ஒவ்வாத அழகுப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
* வெளியே செல்லும்போதும், இரவு படுப்பதற்கு முன்பும் உதடுகளில் தரமான உதட்டுக் களிம்புகளைத் (Lip balm) தடவிடுங்கள்.

நீளமான கூந்தலுக்கான அழகு குறிப்புகள்,

பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை.

போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம். நீண்ட கூந்தலை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* நீண்ட கூந்தலை உடையவர்கள் பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.

* ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* கழுத்து குட்டையாக இருப்பவர்கள் முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போட்டால் அழகாக இருக்கும்.

* நீளக் கழுத்து உள்ளவர்கள் காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து உள்ளவர்கள் பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து உள்ளவர்கள் கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டை முகம் உடையவர்கள் உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* சதுரமுகம் உடையவர்கள் தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.

* குண்டாக இருப்பவர்கள் கொண்டை போட்டால் நன்றாக இருக்காது. பின்னல் போட்டால் அழகாக இருக்கும்..

* எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும்.



காய்கறிகள் சொல்லும் அழகுக் குறிப்புகள்



காய்கறிகளில் உள்ள தாதுப் பொருட்கள், புரத சத்துக்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திட உதவுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் காய்கறிகள் சருமத்தை பாதுகாத்து அழகாக திகழ்ந்திடவும் உதவுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காய்கறிகளின் உதவியுடன் மாசுமறுவற்ற பளபளப்பான சருமத்தை எந்தவித பக்கவிளைவுகள் இல்லாமல் பெறமுடியும். அதற்கு காய்கறிகளின் சிறப்புக்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது. கீழே நாம் பார்க்க இருக்கும் காய்கறிகள் அன்றாடம் நம்முடைய வீட்டின் சமயலறையிலேயே கிடைக்கின்றன. அவற்றின் சிறப்புக்களை அறிந்து நாமும் அழகுறலாமே!

வெள்ளரி

வெள்ளரியின் சிறப்பம்சங்கள்

வைட்டமின் சத்துக்கள் நிறைந்த வெள்ளரியில் இருக்கு அமினோ அமிலங்கள் சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்வதோடு சருமத்தில் இருக்கும் ஒவ்வாமையையும் நீக்கிட உதவுகிறது. கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்க உதவுவதுடன் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், முகப்பருக்கள், சருமம் வறண்டு போகாமல் காப்பது என பல வகைகளில் உதவுகிறது. இதனை உபயோகிப்பதன் மூலம் மிருதுவான சருமத்தை பெறலாம்.

வெள்ளரி தரும் அழகுக் குறிப்புகள்

* வெள்ளரிச் சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் முகத்திற்கு நல்ல பொலிவை தந்திடும்.

* ஒரு மேஜைக்கரண்டி வெள்ளரி சாறுடன் ஒரு மேஜைக் கரண்டி எலுமிச்சை சாறைச் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மினுமினுப்பு கூடும்.

தக்காளி

தக்காளியின் சிறப்பு அம்சங்கள்

தக்காளியில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (Alpha hydroxy Acids) உள்ளது. இது சருமத்தின் PHஐ சமன் செய்திட உதவுகிறது. மேலும் நம்முடைய சருமத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்களை இருக்கமாக்கி சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாத்திட
உதவுகிறது. இதில் இருக்கும் லைகோபின் (lycopene) கூட்டுப்பொருள்களில் எதிர்ப்பு சக்தி மிகுந்து காணப்படுகிறது.

தக்காளி தரும் அழகுக் குறிப்புகள்

* தக்காளியின் சாறை தினமும் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவுவதால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

* இரண்டாக வெட்டிய தக்காளித் துண்டுகளால் முகத்தை நன்றாக மஸாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவினால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

* ஒரு மேஜைக்கரண்டி தக்காளி சாறுடன் ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிடவும். இதனால் நம்முடைய சருமத்தின் நுண்ணிய துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

வெள்ளை முள்ளங்கி

வெள்ளை முள்ளங்கியின் சிறப்பம்சங்கள்

வெள்ளை முள்ளங்கியில் வைட்டமின் சி மற்றும் நச்சுப் பொருட்களை எதிர்த்திடும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின் சி சருமப் புற்றுநோய் (Melanoma) ஏற்படாமல் தடுத்திட உதவுகிறது. நம்முடைய உணவில் வெள்ளை முள்ளங்கியைச் சேர்த்து கொள்வதன் மூலம் பொலிவான மிருதுமான சருமம் பெற்றிடலாம். காய்கறி சாலட்களிலும் முள்ளங்கியை சேர்த்துக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளை முள்ளங்கி தரும் அழகுக் குறிப்புகள்

* வறண்ட சருமம் உடையவர்கள் வெள்ளை முள்ளங்கி சாறுடன் சிறு வெண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரினால் கழுவுவதால் சருமம் மிருதுவாவது மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள கறைகளையும் நீக்குகிறது.

* வெள்ளை முள்ளங்கியின் சாறை முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நாளடைவில் நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் சிறப்பம்சங்கள்

அனைவருக்கும் பிடித்தமான ஒரு காய் என்ராலே அது உருளைக்கிழங்கு தான். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கான காய் இது. இதில் இருக்கும் கீடோன் (Ketone) சத்து சருமத்தை சுத்தம் செய்திடவும், சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை நீக்கிடவும்,
இரத்த சுத்திகரிப்பை அதிகரித்திடவும் உதவுகிறது. இதில் இருக்கும் கேட்டேகோலஸ் (Catecholase) என்ஸைம் (enzyme) நம்முடைய சருமத்தை மிருதுவாக்க உதவுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் அதிகபடியான எண்ணெயை நீக்கவும்
உதவுகிறது. கண்ணைச் சுற்றி இருக்கும் கருவளையத்தை இவைகள் நீக்கிட உதவுவது நாம் அனைவரும் அறிந்ததே.

உருளைக்கிழங்கு தரும் அழகுக்குறிப்புகள்

* உருளையை இரண்டு துண்டுகளாக வெட்டி அவைகளைக் கொண்டு முகத்தில் மேலும் கீழுமாக மஸாஜ் செய்து 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவுவதால் முகத்தில் இருக்கும் அதிகப்படி எண்ணெய் நீங்கி முகம் பொலிவுடன் திகழும்.

* முகத்தின் பொலிவை அதிகரித்திட தினமும் உருளைக்கிழங்கின் சாறினை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவிவிடவும்.

* உருளையை வேகவைத்த நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது உங்களுடைய கைகளை அதில் 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு சுத்தமான நீரினால் கழுவுவதால் கைகளில் இருக்கும் அழுக்குகள் நீங்குவதோடு கைகள் மிருதுவடையும்.

புதினா

புதினாவின் சிறப்பம்சங்கள்

குளுமையை தரும் மூலிகையான புதினாவை உட்கொள்ளுவதன் மூலமாக புலன்களை சுறுசுறுப்படைகின்றன. இவைகளை பச்சையாகவும் உலர்ந்த பின்பு பயன்படுத்தலாம்.

புதினா தரும் அழகுக் குறிப்புகள்

* புதினா இலைகளை மூன்று நாட்கள் , அந்த நீரை பஞ்சின் உதவியுடன் முகத்தில் தடவுவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்திட உதவுகிறது.

சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க,


ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை ஏற்படுகிறது.

முகத்தில் தோன்றும் பருக்களை கிள்ளுதல், முறையாக சுத்தம் செய்யாதது, தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றாலும் இப்பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ…

* காய்கறிகள், பழங்கள் அல்லது மூலிகைகள் அடங்கிய ‘பேஸ் பேக்’குகள் தோலில் விரிவடைந்த துளைகளை சரி செய்ய உதவுகிறது. நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.

முதலில் தோலை சுத்தப்படுத்தும் விதிமுறைகளை கையாள வேண்டும். அதன் பின் 5 நிமிடங்கள் ஆவி பிடித்த பின், தோலில் விரிவடைந்த நுண் துளைகளை சரி செய்வதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ளலாம்.

* வெள்ளரிச்சாறை முகத்தில் பூசி 5 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.

* ஆரஞ்சு தோல் பவுடர், ஓட்மீல் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (கண்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர்க்க வேண்டும்).

- மேலே சொன்ன முறைகளை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவடைவதை காணலாம்.

முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டு,


எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், முக அழகு முழுமை பெறாது.

பொட்டை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் எல்லோரையும் கவரும் விதத்தில் பொட்டுக்கள் வண்ணம், வடிவம் போன்றவைகளில் புதுமை படைத்துக் கொண்டிருக்கிறது.

* சதுர முக அமைப்பு உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். இவர்கள் வைத்துக்கொள்ளும் பொட்டுக்கள் நீளமானதாகவும், அகலம் குறைந்ததாகவும் இருக்கக்கூடாது. உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

* உருண்டை முக அமைப்பு உள்ளவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகுதரும்.  நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

* முக்கோண வடிவ முக அமைப்பு உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

* இதய வடிவ முகஅமைப்பு உள்ளவர்களுக்கு நீண்ட பொட்டுகள் நன்றாக இருக்கும். முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொட்டு


பயனுள்ள குளியல் முறைகள்,

வணக்கம் நண்பர்களே! எப்படி இருக்கீங்க? வீட்டு வேலை, ஆபிஸ் வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல இருக்கே? சோர்வா இருந்தா ஒரு குளியலைப் போட்டுட்டு வாங்களேன். எங்க போறீங்க? அதுக்குள்ள குளிக்கக் கிளம்பிட்டீங்களா? ஒரு அஞ்சு நிமிஷம் இந்த கட்டுரையைப் படிச்சுட்டுக் குளிக்கப் போங்களேன்! உங்க சருமத்திற்கு ஏற்ற குளியல் முறைகளைச் சொல்றேன்.

அன்றாடம் நம் உடலில் படிகின்ற கண்ணிற்குத் தெரியாத தூசுகள், சுரக்கின்ற வியர்வை, அதனால் ஏற்படும் ஒருவிதமான நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதற்காக குளிக்கிறோம், எல்லார்க்கும் தெரிஞ்ச விஷயம்தான்! குளிச்சதும் உடம்புலேயும் மனசிலேயும் உற்சாகம், மலர்ச்சி எல்லாம் வருதுல்ல…. இதெல்லாம் உங்களுக்கு டபுளா கிடைக்கணுமா? (பாயிண்டுக்கு வந்துட்டேன்) இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க….

மிருதுவான குளியல் முறைகள் :

சோர்வு / மன அழுத்தம் நீங்க :

மூன்று கப் நல்ல ஸ்ட்ராங் கமோமைல் டீ (chamomile Tea) எடுத்து தண்ணில கலந்து குளிக்கணும். காமோமைல் டீல இருக்கிற மருத்துவ குணங்களும், மிருதுவாக்கிற தன்மையும் உங்களை ஈஸியா மன அழுத்தத்திலிருந்தும், சோர்விலிருந்தும் விடுவிச்சுடும்.

எண்ணைப் பசை சருமத்திற்கு :

உங்க வீட்டுல ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம் வாங்கி வைச்சது லேசா அழுகிடுச்சா? தூக்கிப் போட்றாதீங்க! குளிக்கிற தண்ணில சிட்ரிக் ஆசிட் அதிகமா உள்ள பழங்களான எலுமிச்சை , ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கலந்து குளிச்சுப் பாருங்க. இந்த சிட்ரிக் ஆசிட் பாக்டீரியாக்களைக் கொல்வதோடு, அழுக்கை அகற்றி, தோலில் உள்ள தேவைக்கு அதிகமான எண்ணையையும் உறிஞ்சிக் கொள்கிறது. நல்ல நறுமணமாகவும் இருக்கும். அதனால இனிமே எண்ணைப் பசை சருமத்துக்கு குட்பை சொல்லிட வேண்டியதுதானே! (வேண்டாம்னு தூக்கிப் போடற பழத்துக்கும் இப்போ வேலை வந்தாச்சு!)

வறண்ட சருமத்திற்கு :

இந்த வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு எல்லாக் காலங்களும் பிரச்சனைதான். வருடம் 365 நாளும் குளித்ததும் எண்ணை அல்லது மாய்ச்சுரைசர் உபயோகப்படுத்தியே ஆகவேண்டும். இனிமே அது பற்றிய கவலை வேண்டாம்! நீங்க குளிக்கிற தண்ணியில பேக்கிங் சோடா கலந்து குளிச்சுப் பாருங்க. பேக்கிங் சோடா ஒரு நல்ல மாய்ச்சுரைசர். அல்லது ரோஸ் ஆயில் ஒரு பத்து சொட்டுகள் கலந்து குளிக்கலாம். இந்த ரோஸ் ஆயில் நம் தோலிற்குத் தேவையான தண்ணீரைக் காயவிடாமல் ஈரப்பதத்துடனே வைத்திருக்க உதவுகிறது. குளித்ததும் நாம் போட்டுக் கொள்கிற வாசனைத் திரவியம் எல்லாம் தேவையில்லை. இதுவே ஒரு சென்ட்தானே.

டிப்ஸ்: ஆயிலும் தண்ணியும் எப்பவும் நல்லாக் கலக்காது இல்லையா? அதனால கொஞ்சமா அதுல பாலைக் கலந்தீங்கன்னா நல்லா மிக்ஸ் ஆயிடும்!

இறந்த செல்களை அகற்ற :

ஒரு சின்ன பாக்கெட் பால் பௌடரை குளிக்கிற தண்ணீரில் கலந்து குளிக்கவும். பாலில் உள்ள லாக்டிக் ஆசிட் தோலில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை அகற்றி உங்கள் சருமத்தைக் குழந்தையின் தோலைப் போல மிருதுவாக மாற்றிவிடும்.

உடல் அசௌகரியங்களிலிருந்து விடுபட :

2 டீஸ்பூன் இஞ்சித்தூள் மற்றும் 2 டீஸ்பூன் வறுத்த கடுகு ஆகியவற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பெண்களுக்கு பீரியட்ஸ் நேரங்களில் வரும் அசௌகரியங்களிலிருந்து விடுபட்டு ஃப்ரெஷ்ஷாக உணரலாம்.

சுகமான உறக்கத்திற்கு :

பல பேர் இதுக்காகத்தான் ரொம்பக் கஷ்டப்படறோம் இல்லையா? கவலைய விடுங்க. படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்.

நச்சுத்தன்மையை அகற்ற :

நாம் வெளியில் செல்லும்போது கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை வாய்ந்த எத்தனையோ தூசு துகள்கள் நம் சருமத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பல சரும வியாதிகள் வந்துவிடுகின்றன. இதைத் தவிர்க்க, நல்ல வெதுவெதுப்பான நீரில் 250 கிராம் கடல் உப்பு, 500 கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் நன்கு குளிர்ச்சியாகும் வரை ஊற வைக்கவும். பிறகு குளிக்கவும். இந்தக் குளியல் உங்கள் சருமத்தை மிருதுவாக்குவதோடு எல்லாவிதமான நச்சுத் துகள்களையும் நம் தோலிலிருந்து நீக்கிவிடுகிறது. (திருப்பூர் மக்களுக்கு நல்லா யூஸ் ஆகுமோ?)

தினமும் இந்த மாதிரி குளிக்க முடியாவிட்டாலும் கிடைக்கும் விடுமுறை நாட்களில் ரிலாக்ஸா குளிச்சு ரிலாக்ஸா இருங்க! ஆமா.. அது என்ன ஒரு கூட்டமா கையில கம்போடு என்னையப் பாத்து வந்துக்கிட்டு இருக்காங்க! என்னது அடுக்குமாடி அபார்ட்மெண்ட் ல ஒரு பக்கெட் தண்ணிய ஒன்பது பேரு குளிச்சிகிட்டு இருக்கீங்க. இதுல பாத்டப், ரோஸ் ஆயில், லாவண்டர் எல்லாம் சொல்றேனா…… ஆளைவிடுங்கப்பா சாமி! இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. எஸ்கேப்…!

மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகள்!!


மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால், சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி, சருமம் விரைவில் வெள்ளையாவதை உணரலாம். அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும். சருமத்தை வெள்ளையாக்கும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போமா!!!

மஞ்சள் மற்றும் மில்க் க்ரீம்: மஞ்சள் துளை, மில்க் க்ரீமுடன் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், விரைவில் சருமம் வெள்ளையாகும். ஏனெனில் இதில் உள்ள மில்க் க்ரீம் சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கவும், மஞ்சள் தூள் சருமத்தின் கருமை நிறத்தை போக்கும்.

மஞ்சள் மற்றும் தேன்: மஞ்சள் தூளை 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து, கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

மஞ்சள் மற்றும் சந்தனம்: சருமத்தில் உள்ள பருக்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று காணப்பட வேண்டுமெனில், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பேஸ்ட், சிறிது சந்தனப் பொடி, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, அந்த கலவையை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர்: 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அடித்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் ரிலாக்ஸ் ஆவதுடன், சருமம் வெள்ளையாகவும் காணப்படும்.

மஞ்சள் மற்றும் முல்தானி மெட்டி: அனைவருக்குமே முல்தானி மெட்டியைப் பற்றி நன்கு தெரியும். அதிலும் முல்தானி மெட்டி பருக்கள் மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயைப் போக்க வல்லது என்பதும் தெரியும். ஆனால் அந்த முல்தானி மெட்டியை மஞ்சள் தூள் மற்றும் பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவினால் சருமம் பளிச்சென்று காணப்படும்.

எண்ணெய்தன்மை கொண்ட கூந்தல் பராமரிப்பு,


எண்ணெய் தன்மை கொண்ட கூந்தல் என்றால் பிரச்சனை அதிகம். உஷ்ணம் அதிகரிக்கும் போதும், டென்ஷன் கூடும் போதும் எண்ணெய் அதிகம் சுரக்கும். இந்த வகையான கூந்தலைக் கொண்டவர்களின் மயிர்கால் எப்பொழுதும் எண்ணெய்யில் ஊறியது போல் காட்சியளிக்கும். கூந்தலை அடிக்கடி கழுவாவிட்டால் சொறி ஏற்படும்.

பங்கல் இன்பெக்ஷன் வாய்ப்பு மிக அதிகம் என்பதால் தினமும் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு கழுவவேண்டியதிருக்கும். கழுவும்போது ஹேர் ஸ்கிரபர் பயன்படுத்தி தலை சருமத்தை தேய்த்து கழுவ வேண்டும். வறண்டு போய் காணப்படும் முடியின் கீழ்ப்பகுதியில் மட்டும் கண்டிஷனர் போடலாம்.

முடி உலர்ந்த பின்பு சீவுவதற்கு முன்பு ரொம்ப வறண்டு போய் காணப்பட்டால் சிரம் போட்டுகொள்ளலாம். தலை சருமத்தில் இன்பெக்ஷன் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு பீர் எடுத்து அதில் பஞ்சை முக்கி மண்டை ஓட்டுப்பகுதியில் தேய்த்து கழுவுவது நல்லது.

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்,

முட்டை : முட்டையை உடைத்து ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
பப்பாளி : பப்பாளியும் கரும்புள்ளியைப் போக்கும் பொருட்களில் சிறந்தது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து அலச வேண்டும்.

கடலை மாவு : கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

கற்றாழை : கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம்.

வேப்பிலை : வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

சந்தனம் : சந்தனப் பொடியில், சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பட்டை : பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் : பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

டூத் பேஸ்ட் : கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் டூத் பேஸ்ட் தடவி காய வைத்து, பின் மென்மையாக மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஆவி பிடித்து, காட்டனால் தேய்த்து எடுத்து, இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவ தோடு, சருமத்துளைகளும் மூடிக் கொள்ளும்.

ஆலிவ் ஆயில் : 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத் தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பு,


இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும்.

ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை எ‌ன்று கூறலா‌ம். தலை‌க்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.

மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம். இது தோலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.

உதடு அழகை பராமரிக்க,


பெண்களில் அழகை எடுத்துக்காட்டுவதில் கண்களுக்கு அடுத்தபடியாக இருப்பது உதடு. இத்தகைய உதடு கருத்து பொலிவிழந்து காணப்பட்டால் முகத்தின் வசிகரம் கெட்டு விடும். சில பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் உதட்டை கடித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி செய்வதால் முதட்டின் மென்மை போய் விடும். மேலும் சில இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். பின் படிப்படியாக உதடுகள் கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு மிக முக்கிய காரணம் உடலில் அதிக உஷ்ணம் இருப்பதுதான்.

* இந்த உஷ்ணத்தை போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும்.

* இரவில் படுக்க போகும் போது வெண்ணையை உதட்டில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீண்டும் பழைய பொலிவுக்கு வந்து விடும்.

* வாரம் ஒரு நாள் உதட்டிற்கு வெண்ணை போட்டு மசாஜ் செய்து வந்தால் உதடு மென்மையாகி பார்கக கவர்ச்சியாக தெரிய ஆரம்பிக்கும்.

* உதடு சிவப்பாக மாற வேண்டும் இன்றைய இளம் பெண்கள் பல விதமான கிரீம்களை போட்டு உதட்டில் அழகை கெடுத்து விடுகின்றனர். உதடு சிவப்பழகு பெற இயற்கையாக வைத்தியமான கொத்தமல்லியை அரைத்து அந்த சாறை உதட்டில் தொடர்ந்து பூசி வந்தால் படிப்படியாக உதடு சிவப்பழகாவதை பார்க்கலாம்.

பட்டு போல் பளபளப்பான கூந்தல்….,


முடி உதிர்தல், இப்போது ஏராளமான பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் விஷயமாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் விதமாக அறிமுகமாகி இருக்கிறது, மீஸோதெரபி. இது பிரான்ஸ் நாட்டு அழகு சிகிச்சை முறையாகும். இந்த தெரபி மூலம் முடிஉதிர்வது தடுக்கப்படும்.

மண்டையோடு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியையும் துரிதப்படுத்தும் என்கிறார்கள். டி.டி.எச். என்ற ஹார்மோனின் பற்றாக்குறைதான் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. மீஸோதெரபி செய்வது மூலம் இந்த ஹார்மோனின் அளவு உடலில் அதிகரிக்கும்.

இது முடி பலப்படவும், வளரவும் துணை புரிகிறது. மீஸோதெரபி மண்டையோட்டில் உள்ள சரும அடுக்குக்கு வைட்டமின் ஈ, ஏ, அமினோ அமிலம், சில தாது சத்துக்களை அளிக்கிறது. மருத்துவகுணமும் இந்த தெரபியில் இருக்கிறது. இந்த தெரபி ஊசியை பயன்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் வலிக்காது.

ஊசியால் குத்துவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இந்த தெரபியை 8 முதல் 10 தடவை செய்துகொள்ளவேண்டும். முதலில் வாரத்தில் ஒரு தடவை என்று ஆரம்பித்து, பின்பு மாதத்தில் ஒருமுறை என்று ஆக்குவார்கள்.

தினமும் 50 முதல் 100 முடிகள் உதிர்வதை சகஜமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குமேல் உதிர்ந்தால் உடனே கவனிக்கவேண்டும். கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள் தங்களது அன்றாட உணவு பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சமச்சீரான சத்துணவுகளை சாப்பிடவேண்டும்.

காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்கவேண்டும். கீரை மற்றும் மாமிச உணவுகளையும் சாப்பிடலாம். வைட்டமின் சி, சத்து அடங்கிய உணவுப்பொருட்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிக அவசியம். பப்பாளி, எலுமிச்சை, ஸ்டாபெர்ரி, காலிபிளவர், கொய்யா, ப்ராக்கோலி போன்றவைகளில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது.

அதனால் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலில் ஜீரண சக்தி நன்றாக இருக்கவேண்டும். சத்துணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல, சரியான நேரத்தில் தேவையான அளவில் அவைகளை உட்கொள்ளவும் வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே சில சுய சிகிச்சைகளை செய்வதும் கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியும். பூண்டு, பெரிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருந்து சாறு எடுத்து அதனை மண்டையோட்டில் பூசவேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த சாறை பூசிக்கொள்கிறவர்கள், முதல் நாள் இரவில் பூசி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலையை கழுவி குளித்திடவேண்டும். ‘கிரீன் டீ’ யில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். கிரீன் டீயை இளம் சூட்டில் தலையில் தேய்த்து, பிடித்து மசாஜ் செய்யவேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து கழுவவேண்டும். கூந்தல் நன்றாக வளர்ந்து, பட்டுப்போகாமல் அடர்த்தியாக இருக்க, மனநிலை அமைதியாக இருக்கவேண்டும். பரபரப்பாக வாழ்க்கையை உருவாக்கி, மன அழுத்தத்திற்குள் சிக்கிக்கொண்டால் கூந்தல் அதிகமாக உதிரும். அதுமட்டுமின்றி போதுமான அளவில் இரவு நேரத்தில் தூங்கவேண்டும். தண்ணீரும் தேவைக்கு பருகவேண்டும்.

வோட்கா பேஷியல்,


சருமத்தை அழகாக்குவதில் ஒயின், வோட்கா போன்றவை சிறப்பான இடத்தை பெறுகின்றன. இதுவும் வோட்கா வைத்து செய்யும் பேசியல் சருமத்தை பொலிவாக்குகிறது..

இதர ஆல்கஹால் பேஷியல் அயிட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது கொஞ்சம் வித்தியாசமானது. இரவில் படுக்கும் முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

படிப்படியாக உங்கள் தோல் மிருதுவாவதை காணலாம். வோட்கா பேஷியல் முடித்து விட்டு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்களால் உங்களையே அடையாளம் தெரியாது.

கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்,


எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

- வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

- பெண்களுக்கு நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.

- பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

- பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.

கடலை மாவு ஃபேஸ் பேக்,

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும்.

இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

• கடலைமாவு, மஞ்சள்தூள் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

• அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவு பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

• இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்

கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி – ஆரஞ்சு பழ பேஷியல்,

கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் களையாக மாற வழிகள்…

• முகத்திற்கு பேஷியல் போடும் முன்பு முகத்தில் உள்ள அழுக்குகளை துடைத்து எடுக்கவேண்டும். காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு சிறிதளவு பஞ்சில் நனைத்து முகத்தை துடைக்கவேண்டும்.

சருமத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் வெளியேறிவிடும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும்.

கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும். 20 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.

நன்கு கனிந்த பூவன் வாழைப் பழத்தை பிசைந்து அத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற விட்டுக் கழுவி வர, நிறம் பளிச் என்று மாறும்.







வேப்பம்பூ தரும் அழகு குறிப்புகள்

• காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

• வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

• நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்..

• வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம் கழுவ முகம் பளபளக்கும்..

• சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.

• தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும்.

கால் பாத வெடிப்பு பிரச்சனைக்கு தீர்வு,


தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். இதிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ்!

• ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். கடுகு எண்ணெயை கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

• ஒரு நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேயுங்கள். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, பாதம் மென்மையாக மாறுவதை காணலாம்.

• வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் பத்து போல் அப்பி தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் மிருதுவாகும்.

• மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

• உருளைக்கிழங்கை சீவி உலர்த்தி பவுடராக்கி தண்ணீரில் குழைத்து பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, மிளிரும்.

• டூ வீலர் ஓட்டும்போது ஒட்டு மொத்த பிரஷரும் கைகளுக்குப் போவதால், கைகள் கன்னிப் போக வாய்ப்பிருக்கிறது! இதற்காக பயப்படத் தேவையில்லை. நேரடியாக வண்டியின் கைப்பிடியை பிடிக்காமல், கை உறை அணிந்து கொண்டாலோ, கைப்பிடியில் கம்பளியினால் செய்த உறையைப் பொருத்திக் கொண்டாலோ இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

குளிரில் கொட்டுமா முடி? — ஹெல்த் ஸ்பெஷல்,

கோடைப் பருவநிலைதான் நம்முடைய சருமம், முடி… போன்றவைகளைப் பாதிக்கும் மிக மோசமான காலம் என்று நினைக்கிறோம். மழை மற்றும் குளிர்காலங்களில் சருமம் மற்றும் முடி பற்றிய கவலையின்றி இருக்கிறோம். ஆனால், ‘மழை மற்றும் குளிர் காலங்களில் முடியை பராமரிப்பது பெரும் பிரச்னை. இந்தக் காலக்கட்டத்தில்தான் தலை முடி மற்றும் உடல் சருமம் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றை எளிய சிகிச்சை முறைகள் மூலம் சரிப்படுத்தலாம்’ என்கிறார் அழகுக்கலை மற்றும் அரோமா தெரப்பிஸ்ட் கீதா அசோக்.
‘வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில்தான் தலைமுடி பாதிப்புகள் அதிகமாக இருக்கும். தட்பவெட்ப மாறுதல்களால் நம் சருமத்தின் மேல்புறம் ஈரத்தன்மை குறைந்து காணப்படும். லேசாகச் சொரிந்தால்கூட வெள்ளையாகக் கோடு படியும் அளவுக்கு சருமத்தில் வறட்சி இருக்கும். காரணம், உடலில் நீர்சத்து குறைந்து, உடல்சூடு அதிகமாக இருப்பதால்தான். வெயில் காலத்தில் உடல் நன்றாக வியர்க்கும். கோடையில் நிறைய தண்ணீர் குடிப்பதால், வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் நச்சுக்கள் வெளியேறிவிடும். ஆனால் குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்காது. சிறுநீரும் அந்த அளவுக்கு வெளியேறாது. இதனால் நச்சுக்கள் உடலில் தங்கி, தலைமுடியின் வேர் பகுதி பாதிக்கப்படும். இதுதான் தலைமுடி உதிரும் பிரச்னையின் ஆணிவேர்’ என்கிற கீதா அசோக், அதற்கான தீர்வுகளையும் தந்தார்.

உடல் அழகிற்கு ஆலோசனைகள் ,

* ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து கடலை மாவை உபயோகித்து முகம் கழுவ வேண்டும்.

* சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

* மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.

* வைட்டமின் `ஏ` மற்றும் `சி` அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

* கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய்யலாம்.

* வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

* கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.

* ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* உடலில் `புளோரின்` பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் `புளோரின்` சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆட்டுப் பால், வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேன்டும்.

* சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது `சிலிக்கான்` பற்றாக் குறையின் அறி குறியாகும். பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.

* `குளோரோபில்` பற்றாக்குறையால் தோல் உறியும். இதைத் தடுக்க கோதுமை மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.

* நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும்.

செம்பருத்தி தரும் கூந்தல் பராமரிப்பு,

செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக செம்பருத்தியை பயன்படுத்தலாம்.

ஷாம்பை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் கூந்தல் பிரச்சனைகளை சரி செய்ய செம்பருத்தி பயன்படுகிறது. இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கு செம்பருத்தி பூ உதவுகிறது. கூந்தலைச் சுத்தப்படுத்த செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். இவ்வாறு தேய்த்துக் குளிப்பதால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, கூந்தல் படிப்படியாக நன்கு வளர ஆரம்பிக்கும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.

கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்,

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்..

* கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் சேகரிக்கவும். இரண்டையும் தனித் தனியாக காயவைத்து பொடி செய்யவும். இவை இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிது எலுமிச்சை பழம் சாறு 1 டீஸ்பூன் சேர்த்து கலக்கவும்.

இதை தலையில் தேய்த்து 10 நிமிடம் மிதமான வெயிலில் நிற்கவும். பின்னர் குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்தால், இளநரை மறைந்து தலைமுடி கருகருவென ஜொலிக்கும்.

அழகான கன்னம் வேண்டுமா?,

முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம்.

எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும். காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றிவைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும். சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும். கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும். ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.

அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும். ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்





சரும அலர்ஜியை போக்க வழிகள்,

பெண்கள் சிலருக்கு நெற்றியிலும், கன்னங்களிலும் பொரிப் பொரியாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம் தான்.
மேலும் தலையில் உள்ள பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது இந்தக் காரணங்களால் கூட நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.

* ரோஜா இதழ்களை நன்கு அரைத்து அதனுடன் அதே அளவு சந்தனம் சேர்த்துக் நன்கு குழைக்க வேண்டும். அதை பொரி இருக்கும் இடங்களில் போட்டு, இருபது நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.   ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வந்தால் பொரிகள் படிப்படியாக மறையத் தொடங்கும்.

* கசகசா – 2 டீஸ்பூன், கருந்துளசி இலை, 10 இவ்விரண்டையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெட்டிவேரை கொதிநீரில் போட்டு வையுங்கள்.   மெல்லிய வெள்ளை துணியை “ஜில்” தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை “பத்து” போல் போடுங்கள்.

15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, “பொரிகளை” அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும் தன்மை கொண்டது.

மேலும் துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

ஆள் பாதி…ஆடை பாதி….

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். எந்த உடையை எங்கு உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவதில்லை. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது.

திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே மாற்றிவிடக்கூடும். குறுக்குவாட்டில் கோடுகள் அமைந்த புடவையை உயரமான பெண்கள் கட்டினால் குள்ளமாக தெரியும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயரமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

எனவே நமக்கான உடை என்ன என்பதை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். கடைத்தெரு, மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது மிதமான நிறத்தில் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது நலம்.

அலுவலகங்களுக்கோ, பள்ளி கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம். மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது.

சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள் பெண்களின் கைகளில் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும் கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.







சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல் ,


சருமத்திலேயே சென்சிட்டிவ் சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அத்தகைய சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தை பராமரிக்க ஒருசில பொருட்களே உள்ளன.
வேறு ஏதாவது பயன்படுத்தினால், சருமத்தில் நிறைய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களின் சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

• ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

• சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருளாக பயன்படுகிறது. அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

• எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னரே இந்த முறையை செய்வது நல்லது.

• வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.

• டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் படிப்படியாக பொலிவு பெருவதை காணலாம்.

சரும அழகிற்கு உதவும் வினிகர்,

சருமத்தின் அழகை பராமரிக்க உதவும் பொருட்களில் வினிகரும் ஒன்றாக உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
• உடல் நாற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உடல் நாற்றம் மறைய ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

• ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.

• கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

• குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், பாதங்களை வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். பின்னர் மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்,

மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி பொருள். இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் உள்ளது.  இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். மேலும் அக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும், தங்கள் அழகைப் பராமரிக்க மஞ்சள் தூளைத் தான் பயன்படுத்தினார்கள்.

பல அழகுப் பொருட்களில் மஞ்சள் தூளும் ஒரு பொருளாக உள்ளது. இப்போது இயற்கையாக முறையில் வீட்டிலேயே மஞ்சள் தூளைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்று பார்க்கலாம்.

• தினமும் கடலை மாவுடன் மஞ்சள் தூளை சம அளவில் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

• உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் ஆயிலில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, தடவி 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.

• இப்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் முகப்பரு பெரும் பிரச்சனையாக உள்ளது. மஞ்சள் தூளை, சந்தனப் பொடியுடன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், முகத்தில் இருக்கும் முகப்பரு படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..

• பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும்.

• மஞ்சள் தூளில் எலுமிச்சை சாற்ளை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் கருத்து போன சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக மாறும். இதனை தினமும் செய்து வந்தால் நாளடைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

இளநரையை போக்க வழிகள்

உடம்பில் அதிக அளவில் பித்தம் கூடினால் தலை முடி நரைக்கும். சமச்சீரற்ற உணவுமுறை, ௭ண்ணெய் வைக்காமல் தலை சீவுவது, ரசாயனப்பொருட்கள் அடங்கிய ஷாம்போ, சோப்பு உபயோகிப்பது போன்றவைகளினாலும் தலைமுடி வெள்ளையாகிறது.

இன்றைக்கு 15 வயது முதலே ஆண், பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இளநரையை போக்க நம் வீட்டிலேயே மருந்திருக்கிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.

- பசு மோர் இளநரையை போக்கும் அருமருந்து. வாரம் இருமுறை மோர் தலைக்கு தேய்த்து குளிக்கலாம் உஷ்ணம் நீங்கும்.

- தேங்காய் ௭ண்ணெயை காய்ச்சி அதில் கறிவேப்பிலை போட்டு வேகவைக்கவும். இந்த ௭ண்ணெய்யை தினசரி தலைக்கு தேய்த்து வர கூந்தல் இயற்கை நிறத்திற்கு மாறும்.

- உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது பித்தத்தை குறைக்கும். அதேபோல் முசுமுசுக்கை இலையின் சாறு ௭டுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த ௭ண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை படிப்படியாக மாறுவதை காணலாம்.

- இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். அதை சுத்தமான தேனுடன் சேர்த்து ஊறவைத்து தினசரி காலையில் அதை சாப்பிட்டு வர பித்தம் தணியும் இளநரை தானாகவே மாறும்.

- தேங்காய் ௭ண்ணெயில் ௭லுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்யவும். இதனால் இளநரை தானாகவே மாறும். கூந்தல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறு

சரும அழகை காக்கும் க்ரீன் டீ,


க்ரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த க்ரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்….• க்ரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும்.
அதற்கு க்ரீன் டீயை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தால் அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும். மேலும் சருமத்தை தாக்கும் ஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

• பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே க்ரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

• எப்போது சருமம் பொலிவின்றி காணப்படுகிறதோ அதற்கு காரணம் டாக்ஸின்கள் அதிகம் தான்.ஆகவே இத்தகைய பிரச்சனையை முற்றிலும் போக்கும் திறன் க்ரீன் டீயின் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

• கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு க்ரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் க்ரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் தடுக்கும்.

முக அழகு குறிப்பு


வயதான பெண்கள் அவசியம் தங்கள கண்களுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். மை தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதான தோற்றம் போகும். இளமையான தோற்றம் வரும்.
நாற்பது வயதாகிவிட்ட பெண்களும்கூட இளமையுடன் இருக்கலாம். அழகுடன் இருக்கலாம். இருக்க முடியுமா? முடியும். தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழ ஜுஸ் சாப்பிட வேண்டும். நிறையச் சாப்பிடக்கூடாது. ஸ்வீட் தயிர் பால் முட்டை நெய் வெண்ணெய் மாமிசம் தேங்காய் கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் விரைவாக நடக்க வேண்டும்.
பெண்கள் சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அதிலிருந்து வரும் ஆவியைத் தங்கள் முகத்தில் படும்படிச் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டு முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட வேண்டும். முகம் சுத்தமாகும் மிருதுவாகும் பொலிவு பெறும்.

ஆரோக்கிய குறிப்பு ,,

பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது இருபது நிமிஷங்களுக்குமேல் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் கருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப்பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறவர்களும் சாக்லேட் தின்பவர்களும் காப்பி குடிப்பவர்களும் பருமனாகி விடுகிறார்கள். உடம்பு இளைக்க வேண்டும் பெருக்க கூடாது என்று நினைக்கிறவர்கள் இவற்றையெல்லாம் தொடக்கூடாது. தள்ளிவிட வேண்டும்.
தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிய வேண்டும்; அதில் ஒரு ஸ்பூன் தேனைக் கலக்க வேண்டும்; அதைப் பருக வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் அவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனிமையாக இருக்கும்

மேனியை சிவப்பாக எப்படி மாற்றுவது? ,,


எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

கூந்தல் அழகுக் குறிப்புகள் ,,

கூந்தல் அழகுக் குறிப்புகள்
பொடுகு நீங்க
வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
பேன் தொல்லை நீங்க

வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.
செம்பட்டை மறைய

·முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.


கண் அழகு குறிப்பு

கண் அழகு குறிப்பு
நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.






முகம்:,

வெய்யில் காலங்களில் எண்டுணெய்ப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்:


நிலை 1: முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.


நிலை 2: பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.


நிலை 3: பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)


நிலை 4: ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


நிலை 5: கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

தலைமுடி,,

அழகு குறிப்பு
தலைமுடி அழகு குறிப்பு
1. பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும்.(பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெய்யில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.)

2. பின் தலையை மசாஜ் செய்யவும்

3. 10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு pack-ஆகப் போடவும்.(மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)


4. மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.


இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருது வாகவும் இருக்கும்.

முடி கொட்டுவதை தடுக்க ,,

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊறவிட்டு ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள் ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். நிச்சயமாக முடி கொட்டுவுது நின்றுவிடும்.

முக பருவை போக்க.. ,


அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும்

இதை தடுக்க…
1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.
பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்.

Thursday, 28 November 2013

பெண்கள் சிவப்பழகை பெற,,

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

எளிய அழகு குறிப்பு,

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
 பப்பாளி  பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
 புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறு

எடை குறைய,,

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

கூந்தல் வறட்சியை தடுக்க வழிகள்,

பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று தான் கூந்தல் வறட்சி. ஆனால் இத்தகைய கூந்தல் வறட்சியானது சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மருந்துகள் கலக்கப்பட்ட தண்ணீரினால் ஏற்படுகிறது என்றால், அப்போது கூந்தலுக்கு அதிக பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அத்தகைய கூந்தல் வறட்சியினால் கூந்தல் உதிர்தல், கூந்தல் உடைதல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே கூந்தல் வறட்சியை தவிர்த்து, கூந்தலை மென்மையாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்…

• கூந்தலை வறட்சியின்றி பட்டுப்போன்று வைத்துக் கொள்ள வேண்டுமெனில், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் போட்டு குளிர்க்க வேண்டும். இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

• மயோனைஸ் ஒரு கண்டிஷனர் போன்றது. எனவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மயோனைஸ் கொண்டு கூந்தலை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் அலசினால், கூந்தல் வறட்சியைப் போக்கலாம்.

• நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இத்தகைய முடி வெப்பானது கூந்தல் வறட்சியால் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, ஈரமாக இருக்கும் போது தலைக்கு சீப்பைப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கூந்தல் உதிர்வதுடன், முடி வெடிப்புக்களும் ஏற்படும்.

• வறட்சியாக காணப்படும் கூந்தலை, மென்மையாக மாற்றுவதற்கு தக்காளி சாற்றினைக் கொண்டு தலையை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

• பாதாம் பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்தால், வறட்சியினால் பொலிவிழந்து காணப்படும் கூந்தலை பொலிவோடும், பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளலாம்.

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்,


ஆல்கஹாலை குடித்தால் தான் உடலுக்கு பிரச்சனைகள் வருமே தவிர, அதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமம் நன்கு ஜொலிக்கும். மேலும் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் நிறைய ஆல்கஹால்கள் பயன்படுகின்றன.
தற்போது விஸ்கி ஃபேஷியல் பெண்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. இத்தகைய விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதற்கு, அழகு நிலையங்களில் நிறைய செலவாகும். ஆனால் அந்த விஸ்கி ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே முயற்சி செய்யலாம்.

ஆமாம், இந்த விஸ்கி ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?

•  1 டீஸ்பூன் விஸ்கியை, 3 மிலி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் முகத்தை மசாஜ் செய்து, பின் சுத்தமான நீரில் கழுவினால், சருமத்தில் பொலிவு அதிகரிப்பதோடு, சருமம் இறுக்கமடையும்.

• எலுமிச்சை பழ சாறுடன் விஸ்கி சேர்த்து மாஸ்க் போட்டால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தவிர்க்கலாம். அதற்கு விஸ்கியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

• தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சுரைசர். எனவே 2 டீஸ்பூன் விஸ்கியை தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முதுமைத் தள்ளிப் போவதோடு, சரும வறட்சியும் நீங்கும்.

• சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்க முட்டை ஒரு சிறந்த பொருள். எனவே இத்தகைய முட்டை நன்கு அடித்து, அதில் சிறிது விஸ்கி, எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, சரும சுருக்கங்கள் மறையும்.

முகத்தில் உள்ள சருமத்துளைகளை போக்க,

சருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்காங்கு காணப்படும் ஓட்டைகள். இவை சருமத்துளைகள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கும். ஆனால் அத்தகைய சருமத்துளைகளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல்லை.

அதுவே பெரிய அளவில் உருவாகும் போது முக அழகானது பாதிப்படைகிறது. முகத்திற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் இருக்கும் படியாக வைத்தல், சருமத்தை சரியாக பராமரிக்கால் இருத்தல் போன்ற பல காரணங்களால் சருமத்துளைகள் வருகின்றன.

வயது அதிகரிக்க அதிகரிக்க, தோல்களின் மீட்சி குறைவதால், இந்த துவாரங்கள் பெரிதாகும். முகத்தில் ஏற்படும் துவாரங்கள் கண்டிப்பாக நம்மை பாதிக்கும்.   இத்தகைய பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க சில வழிகள் உள்ளன. அவை…..

• தேன், துவாரங்களின் அளவை குறைக்க உதவும். 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகைத் தேனை, முகத்தில் நன்றாக தடவிக் கொண்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்தப் பின், 10 நிமிடங்கள் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

• ஐஸ் கட்டிகளை ஒரு காட்டன் துணியில் சுருட்டி, முகத்தின் மேல் தேய்ப்பது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். ஐஸ் கட்டிகள் துவாரங்களை இறுக்கமாக்கும். இதனை தினசரி காலை முகத்தில் தடவ வேண்டும். மேலும் இது சரும மெழுகின் உற்பத்தி அளவை இயல்பு நிலையில் வைத்திருக்க உதவும்.

• 5 ஸ்பூன் தேனையும், 2 ஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியையும், 2 ஸ்பூன் பால் பொடியுடன் கலந்து இந்த கலவையை சமமாக முகத்தில் தடவி, வட்டமான முறையில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இறுதியில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தவறாமல் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்

• வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
• முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

• முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு வாரம் ஒரு முறை பெண்கள் ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

•  முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, இந்த பழங்களை கொண்டு  மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவுறும்.

• தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

• சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

• எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

• கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம். அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு, மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும்.

முகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரங்கள்


பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் கூந்தல் அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்…..

• நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் தங்களின் தலையில் நடு வாகிடு எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

• சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்து கொள்ளுங்கள். குட்டை முடி உள்ளவராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம்.

• வட்ட முகமுடையவர்கள் உங்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட் னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

கோடைக்கு ஏற்ற ஆடை…

மனித வாழ்க்கையில் கடந்து வரும் பல்வேறு பருவங்கள் எப்படி தவிர்க்க முடியாததோ அதுபோல் இயற்கையில் மாறிவரும் பருவ காலங்களும் தவிர்க்க முடியாதது. மனித பருவங்களை கொண்டாடுவதுபோல், இயற்கையின் பருவங்களையும் கொண்டாட வேண்டும்.

அந்த வகையில் இப்போது நாம் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறது, மீண்டும் ஒரு கோடை! “கோடை என்றாலே சுட்டெரிக்கும் வெயிலும், வழியும் வியர்வைதான் நினைவுக்கு வரும். அதனால் சவுகரியமாக இருக்கமுடியாது. விதவிதமாக ஆடைகள் அணியமுடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

உண்மை அதுவல்ல. கோடை காலத்திலும் அழகழகாக ஜொலிக்கும் உடைகளை அணிந்து ஆனந்தமாக வாழலாம். “கோடை என்றாலே காட்டன் ஆடைகளைத்தான் அணியவேண்டும் என்ற நிலையில் இருந்து மக்கள் மாறிவிட்டார்கள். ‘இந்த சம்மருக்கு புதிதாய் என்ன வந்திருக்கிறது’ என்று புதுப்புது பேஷன் உடைகளை தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவர்களது ஆசையை புரிந்துகொண்ட டிசைனர்கள் விதவிதமாக கோடைக்கால ஆடைகளை வடிவமைத்து நகரத்திற்கு நகரம், பேஷன் ஷோ நடத்தி வெளியிட்டுக்கொண்றார்கள். இந்த கோடையில் பெண்கள் விரும்பும் சில வகை பேஷன் உடைகள் இதோ…

மோனோ குரோமேட்டிக் ஆடை:………….பொதுவாக கோடை காலத்திற்கு ஏற்றது, வெள்ளை நிறம் என்பார்கள். அது சூரிய வெப்பத்தை வெளித்தள்ளும். கறுப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கும். அதனால் அது கோடைக்கு பொருத்தமற்றது என் பார்கள். இந்த மோனோ குரோமேட்டிக் ஆடைகள் கறுப்பும், வெள்ளையும் கலந்த கலவை.

பொதுவாக கட்டம்போட்ட ‘செக்’ ஆடைகளுக்கு சம்மரில் அதிக மவுசு ஏற்படும். அதை ஈடுசெய்யும் விதத்தில் இந்த கோடைக்கு பிளாக் அண்ட் ஒயிட் செக் உடைகள் பேஷனாகி இருக்கிறது. பெண்கள் அதிக அளவில் இதை விரும்புகிறார்கள்.

ஸ்டிரைப்ஸ்: இந்த வார்த்தைக்கு பல்வேறு நிறத்திலான கோடுகள், நீண்டு குறுகிய கோடுகள் என்று அர்த்தம். இந்த ஆடைகளும் கோடுகளால் நிரம்பியது. நம் நாட்டில் இப்போது பெண்கள் உடல் பருத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வகை நேர் கோடு உடைகள் அவர்களை ஓரளவு கச்சிதமாக காட்டுவதால், ‘ஸ்டிரைப்ஸ்’க்கு மவுசு அதிகரித்திருக்கிறது.

குள்ளமாக இருப்பவர்களும் ‘நேர் கோடு’ ஆடைகளை கோடைக்கு தேர்வு செய்கிறார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் குறுக்கு கோடு கொண்ட ஆடைகளையும், கச்சிதமான உடல் வாகுவைக்கொண்ட பெண்கள் ஏற்ற- இறக்கமான கோடுகளைக் கொண்ட ஆடைகளையும் கோடைக்கு தேர்வு செய்கிறார்கள்.

கலர் பிரேக்: ‘இந்த கலருக்கு இந்த கலர்தான் பொருத்தமாக இருக்கும்’ என்ற பொதுவாக கருத்து நிலவிக்கொண்டிருக்கிறது. அப்படியல்ல, அதற்கு நேர் எதிரான கலரைக்கூட அணிந்து ஜமாய்க்கலாம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, இந்த ‘கலர் பிரேக்’ பேஷன்.

இதில் இருக்கும் சிறப்பு என்னவென்றால், கட்டமைப்பான உடல்வாகு இல்லாதவர்களையும், அந்த குறைபாடு தெரியாத அளவிற்கு இந்த வகை ஆடைகள் நேர்த்தியாகக்காட்டும். ஆப்பிள் வகை உடல்வாகு கொண்ட பெண்களின் உடலின் மேல் பகுதி குண்டாகவும், கீழ்ப்பகுதி ஒல்லியாகவும் இருக்கும்.

அவர்கள் தங்களுக்கான கோடைகால உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மேல் பகுதி ஆடை அடர்த்தியான நிறத்திலும், கீழ்ப்பகுதி ஆடை இளநிறத்தில் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.