* வெயிலின் சூடு காரணமாக நீங்கள் போட்டுக்கொள்கிற மேக்கப் வழியக் கூடும். இதைத் தடுக்க வாட்டர் ப்ரூஃப் மேக்கப் சாதனங்களை உபயோகிக்கலாம். முதலில் வாட்டர் ப்ரூஃப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் மேக்கப் போடுங்கள். இதனால் மேக்கப் வெயிலில் வழியாமல் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
* மஸ்காராவிலும் இப்போது வாட்டர் ப்ரூஃப் ரகம் வந்து விட்டது. அதை உபயோகிப்பதால் வெயிலினால் கண்கள் கலங்கியது மாதிரிக் காணப்படாமல் பளிச்சென இருக்கும்.
* கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து விட்டுப் படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.
* லிப்ஸ்டிக், ஐ ஷோடோ போன்றவையும் வாட்டர் ப்ரூஃப் வகையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவது நல்லது
No comments:
Post a Comment