Thursday, 28 November 2013

பெண்களை கவரும் காட்டன் உடைகள்…..

காட்டன் சேலையும், உடைகளும் நம்மூரைப்பொறுத்தவரை ஒல்லியானவர்களுக்கும், ஆசிரியர் வேலையில் இருப்போருக்குமான அடையாளம்!  மற்ற எந்த உடைகளுக்கும் இல்லாத அழகு காட்டனுக்கு உண்டு.
• காட்டனா இருக்கணும், அதே சமயம் மொடமொடப்பா இருக்கக் கூடாதுனு நினைக்கிறவங்களுக்கு நாராயண்பேட் காட்டனும், பேட்டேரு காட்டனும், பொபிலி காட்டனும் சரியான சாய்ஸ் ஆகும்.
•  வயசானவங்களுக்கு ஜரிகை வச்ச வெங்கடகிரி காட்டன். சிம்பிளா இருக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு கத்வால் காட்டன். சின்னப் பொண்ணுங்களுக்கு சூப்பர் நெட்டும், தனேகலியும் அழகாக இருக்கும்.
•  பெரிய பொம்மை டிசைன் போட்ட காட்டன் சல்வார்தான் இப்ப காலேஜ் பொண்ணுங்க மத்தில ஃபேஷன்.
* காட்டன் துணிகளை கைகளால துவைப்பது தான் மிகவும் நல்லது. புது காட்டன் புடவையை முதல் முறை துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீர்ல கொஞ்சமா கல் உப்பு சேர்த்து பத்து நிமிஷம் ஊற வச்சு அலசினா, ரொம்ப நாளைக்கு புடவையோட புது மெருகு அப்படியே இருக்கும். பூந்திக் கொட்டை சேர்த்த தண்ணீர்ல ஊற வச்சு அலசினாலும், பளபளப்பு மங்காம இருக்கும் புதுசு போல் இருக்கும்…..

No comments:

Post a Comment