Thursday, 28 November 2013

ஹேர் கலரிங்


முன்பெல்லாம் பிரபலங்களும், வசதி படைத்தவர்களும் தான் கூந்தலை கலரிங் செய்வார்கள். தற்போது இந்த மோகம் அனைவரிடமும் காணப்படுகிறது. தங்களை நாகரிக தோற்றம் கொண்டவர்களாகவும், அழகிய சாதாரண மற்றும் குடும்பப்பாங்கான தோற்றமுடையவர்களாகவும் தயாராக்கிக் கொள்வதற்கு ஹேர் கலரிங் முறையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஹேர் கலரிங்கில் 3 விதம் உள்ளது. அவை:
கிரே ஹேர் கவரேஜ் அதாவது நரைமுடியை நிறம் மாற்றுதல். குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்து வண்ணங்கள் பூசுவது.   இதுபோன்ற முறைகளில் கூந்தலுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது.
இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஒளி முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் பாதுகாக்கிறது. ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள்பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
வீட்டில் உள்ள பெண்மணிகள் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றால், உடனடியாக கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஒரிஜினல் அட்டாச்சுடு ஹேர் பீஸை நிமிடத்தில் கிளிப் மாதிரி பொருத்திக் கொள்ளலாம். இது அழகு நிலையங்களுக்குச் சென்று செய்து கொண்ட கூந்தல் அலங்காரத்துக்கு இணையாக இருக்கும்.
நிகழ்ச்சிக்கு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் போது, அது எந்த மாதிரியான நிகழ்ச்சி அது காலை நேரமா அல்லது மாலை நேரமா அவரவர் வயது மற்றும் உறவு முறை ஆகியவற்றிற்கு ஏற்ப விதவிதமான கூந்தல் அலங்காரம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment