Thursday, 28 November 2013

கருமை நிறம் மறையtamil beauty tips in tamil language

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும்.

இருந்தாலும் இன்றைய பெண்கள், சிலர் பார்லர்களில் லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இது தாய், சேய் உடல் நலனை பாதிக்கும் தன்மை கொண்டது.

இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும்  பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதை தேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்

No comments:

Post a Comment