Thursday, 28 November 2013

இளம் வயது முக சுருக்கத்தை போக்க…tamil beauty tips in tamil language

இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் ‘பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பதுதான் எனக் கூறப்படுகின்றது.இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது ஒன்று.
இளமையிலேயே வயதானவர் போல் தோற்றமளித்தால் யாருக்குத்தான் கவலை வராது? உணவு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது கவலை மறைந்து போகும் என்பது உறுதி.
இதோ சில குறிப்புகள் உங்களுக்கு:-
வெந்தயக் கீரையுடன் பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். இதனால் முகத்தில் சுருக்கம் என்பது எட்டியே பார்க்காது.
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.
கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாமே. முகத்தில் சுருக்கம் என்ற கவலை இனியுமேன்?
முற்றிலும் முக சுருக்கத்தை தவிர்த்திடுங்கள். முக பொழிவுடன் உலா வாருங்கள்

No comments:

Post a Comment