ஒரு பெண்ணின் அழகை குறிப்பிட முக்கியமான அங்கங்களில் ஒன்றாக விளங்குகிறது அவர்களின் கை நகங்கள். அப்படி பட்ட நகங்களில் செய்யப்படும் கலை வேலைகள் ஒரு பழமையான பழக்கமாகும். இந்த கலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறை திருப்பி பார்த்தால் எகிப்தியர்களின் காலத்தில் என்று நம்பப்படுகிறது. எகிப்தியர்கள் பெர்ரி மற்றும் இதர செடியில் உள்ள நிரச்சத்தை எடுத்து தங்களின் நகங்களுக்கு வர்ணம் பூசி அழகு சேர்த்தனர். நகங்களுக்கு பல வகைகளில் அழகை சேர்க்கலாம். அது உங்கள் எண்ணம் மற்றும் ரசனையை பொறுத்து மாறுபடும். அது எளிய நுட்பமான முறையில் இருக்கலாம் அல்லது கருமையாக மூர்க்கமாகவும் இருக்கலாம். நக கலையை (Nail Art) எந்த வயதில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. மேலும் நக கலை என்பது சுலபமான ஒன்று. அதனை வீட்டிலேயே செய்யலாம்.
ADVERTISEMENT
அதில் பல வகைகள் உள்ளது. அதில் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்திற்கு எளிய பிரெஞ்சு நக கலை, மணிக் கோர்வைத் தோற்ற நகங்கள் அல்லது செய்தித்தாள் அச்சு வகை. உங்களுக்கு தேவையானதெல்லாம் செல்லோ டேப், தெளிமையான நக எனாமல், நக பூச்சு (நெயில் பாலிஷ்) போன்ற சில பொருட்களே. நக கலையை கையாளுவதற்கு முன்பாக பல வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். சரியாக பராமரித்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் அழகான ஆரோக்கியமான நகங்களை பெறலாம். வீட்டிலேயே நக கலையில் ஈடுபடும் போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியவை சில உள்ளது. அது என்னெவென்று ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க!

No comments:
Post a Comment